இன்று மாதசிவராத்திரி, சிவனை வழிபட துன்பம் நீங்கும்.. மகிழ்ச்சி நிலைக்கும்!
ADDED :19 minutes ago
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் குடும்பத்தில் நன்மை பெருகும். கோயில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்யலாம். ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். இன்று சிவ சிவ என ஈசனை சரணடைவோம்.. நல்லதே நடக்கும்..!