உன்னால் முடியும்: விவேகானந்தர்
* உன்னால் எதையும் சாதிக்க முடியும். நம்பிக்கையுடன் முயற்சி செய்.
* இன்று நீ இருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு.
* கஷ்டம் வரும் போது மனம் தளராதே. தைரியமுடன் போராடு.
* பிறருக்கு கீழ்ப்படிந்து நடந்து கொள். கட்டளையிடும் அதிகாரம் தானாக வரும்.
* உண்மைக்காக எதையும் தியாகம் செய். எதற்காகவும் உண்மையை தியாகம் செய்யாதே.
* எதிர்காலத்தில் எப்படி இருப்போமோ என பயப்படாதே. துணிந்து செயலாற்று.
* குறிக்கோளை அடையும் வரை ஓய்வு எடுக்காதே.
* நீ இருப்பதால் மரணம் வராது. அது வந்தால் நீ இருக்க மாட்டாய். பிறகு ஏன் கவலை?
* முதலில் உன்னை நம்பு. எல்லா சக்தியும் உனக்குள்ளே இருக்கிறது.
* வெற்றி, தோல்வி என எது வந்தாலும் ஏற்றுக்கொள்.
* அறிவை வளர்த்துக் கொள். அதுவே உனக்கு துணை.
* பிறருக்கு உதவி செய். கடவுள் உனக்கு உதவி செய்வார்.
* நுாலகத்தை திறந்தால் சிறைச்சாலைகள் மூடப்படும்.
* பிறரது பாதையில் செல்லாதே. உனக்கென தனி வழியை உருவாக்கு.
* உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே.