உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நேபாளம் காலேஷ்வர் கோவிலில் ஸ்ரீ விதுசேகர பாரதி மஹாஸ்வாமி சிறப்பு பூஜை

நேபாளம் காலேஷ்வர் கோவிலில் ஸ்ரீ விதுசேகர பாரதி மஹாஸ்வாமி சிறப்பு பூஜை

நேபாளத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டு வரும் சிருங்கேரி ஜகத்குரு விது சேகர பாரதீ சன்னிதானம் இன்று புனிதமான காலேஷ்வர் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.


நேபாளம் நாட்டில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு விது சேகர பாரதீ சன்னிதானம் காலேஷ்வர் தாமுக்குச் சென்று, பல புனிதமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களில் வழிபாடு செய்தார், மேலும் உலக நலன்வேண்டி பகவான் கலேஷ்வர்நாதருக்கு விசேஷ அபிஷேகமும் பூஜையும் செய்தார். கலேஷ்வர் தாம் என்பது புனிதமான காளி கண்டகி மற்றும் ரகுகாட் நதிகளின் சங்கமத்தில் ஒரு பெரிய பாறையில் (சக்ரா-சிலா) அழகாக அமைந்துள்ள நேபாளத்தின் மியாக்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இந்து புனிதத் தலமாகும். இங்கு விஜயம் செய்த சிருங்கேரி ஜகத்குரு ஜோம்சோம்-கரப்ஜோங் கிராமப்புற நகராட்சியால் அமைக்கப்பட்ட பிரமாண்டமான சாலகிராம செதுக்கலை திறந்து வைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !