/
கோயில்கள் செய்திகள் / குன்றக்குடியில் வைகாசி விசாக விழா; வெட்டிவேர் அலங்காரத்தில் சண்முகநாதப் பெருமான்
குன்றக்குடியில் வைகாசி விசாக விழா; வெட்டிவேர் அலங்காரத்தில் சண்முகநாதப் பெருமான்
ADDED :2 days ago
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வெட்டிவேர் அலங்காரத்தில் சண்முகநாதப் பெருமான் எழுந்தருளினார்.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இன்று நடந்தது. காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து சண்முகநாதப் பெருமான் வெட்டிவேர் அலங்காரத்தில் ஆதீனமட கொழு மண்டபத்திற்கு எழுந்தருளினார். 9.30 மணிக்கு ஆதின மடத்தில் பொன்னம்பல அடிகளார் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தமிழ் மாலை நிகழ்ச்சியும், திருமுழுக்காட்டலும், பச்சை சாத்துப்படியும் பூஜையும் நடந்தது. இரவு, சண்முகநாதப் பெருமான் வெள்ளி ரதத்தில் திருவீதி உலா நிகிழ்ச்சியும் நடந்தது. குன்றக்குடி, காரைக்குடி உட்பட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.