உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நேபாளம் தேவ்கட் தாமில் சிருங்கேரி ஜகத்குரு விது சேகர பாரதீ சன்னிதானம் வழிபாடு

நேபாளம் தேவ்கட் தாமில் சிருங்கேரி ஜகத்குரு விது சேகர பாரதீ சன்னிதானம் வழிபாடு

நேபாளம்; நேபாளம் நாட்டில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு விது சேகர பாரதீ சன்னிதானம் தேவ்கட் தாமில் உள்ள பல புனித ஆலயங்களில் வழிபாடு செய்தார்.


நேபாளத்தில் நாராயணி மற்றும் கிருஷ்ணகண்டகி நதிகள் இணையும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆன்மீக மற்றும் புனிதத் தலமாகும். இது சித்தவான் தேசிய பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள தேவ்கட் மந்திர் தியானம் மற்றும் அமைதியான ஆன்மீக வழிபாட்டிற்கு உகந்த இடமாக விளங்குகிறது. விஷ்ணு புராணத்தின்படி, பரத மன்னன் இப்பகுதியில் பல ஆண்டுகள் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. சிறப்பு மிக்க இத்தலத்தில் தர்ம விஜய யாத்திரையின் ஒரு பகுதியாக, சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுஷேகர பாரதி மஹாஸ்வாமிஜி, காளி கண்டகி மற்றும் திரிசூலி நதிகளின் புனித சங்கமத்தில் அமைந்துள்ள தீர்த்தக்ஷேத்திரமான தேவ்கட் தாமில் உள்ள பல புனித ஆலயங்களில் வழிபாடு செய்தார். பின்னர் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !