கருட பஞ்சமி என்றால் என்ன?
ADDED :92 days ago
கஸ்யப முனிவருக்கும், வினதைக்கும் மகனாகப் பிறந்தவர் கருடன். பறவைகளின் அரசனான கருடனுக்கு ‘பட்சி ராஜன்’ என்றும் பெயருண்டு.
வினதையின் மகன் என்பதால் ‘வைநதேயன்’ என்றும் அழைப்பர். இவரின் அவதார நாளான கருடபஞ்சமி இந்த ஆண்டு ஜூலை 29ல் கொண்டாடப்படுகிறது. அன்று பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றினால் எதிரி தொல்லை மறையும்.
மணமான பெண்கள் கருடாழ்வாருக்கு துளசி மாலை சாத்தினால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும். விஷப் பூச்சிகளிடம் இருந்து காத்துக் கொள்ள விவசாயிகள் இவரை வழிபடுகின்றனர்.