உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொருளை கைதவறி வைத்துவிட்டீர்களா

பொருளை கைதவறி வைத்துவிட்டீர்களா

சிலர் பொருளை எங்காவது வைத்து விட்டு தேடியலைவார்கள். இத்தகைய பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தவறுதலாக வைத்த பொருள் மீண்டும் கிடைக்கவும், மிக எளிய பரிகாரமாக அரைக்காசு அம்மன் வழிபாடு செய்வது நல்லது. அரைக்காசு அம்மன் படம் ஒன்றை வைத்து, அதன் முன் வெல்லமும், பொரிகடலையும் கலந்த கலவையை வையுங்கள். அரைக்காசம்மா! பொருளைக் கண்ணில் காட்டம்மா! என்று வேண்டிக் கொண்டு தேடுங்கள். பொருள் கிடைத்ததும், அரைக்காசு அம்மனை நன்றியோடு வழிபடுதல் அவசியம்.  அரைக்காசு அம்மன் படம் இல்லாவிட்டால், வாசல் நிலைப்படியைச் சுத்தம் செய்து, அதன் கீழே வெல்லமும், பொரிகடலையும் வைத்து வழிபடலாம். பிரசாதத்தை குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !