வேலையே செய்யாத ஒருவனை ஆன்மிகம் காப்பாற்றுமா?
ADDED :5028 days ago
ஆன்மா என்றால் உயிர். இதற்கு நாம் செய்யும் ஒரே உபகாரம் புண்ணியம் தான். அதாவது, நமது உடலுக்கு ஆடை ஆபரணங்கள் அணிவித்து அழகு பார்க்கிறோம். தரமான உணவை சாப்பிட்டு உடலை வளர்க்கிறோம். ஆனால், இத்தனையும் உடல் இருக்கும் வரை தான். பிறகு மண்ணோடு கலந்து விடுகிறது. ஆனால், உடலில் இருந்து பிரியும் உயிர், இன்னொரு பிறவி எடுக்கிறது. அப்பொழுது இன்பமாய் வாழ அந்த உயிருக்கு இப்போது செய்கிற புண்ணியம் தான் பலம். உழைப்பால் பலனடைவது உடல். ஆன்மிகத்தால் பலனடைவது உயிர். உடல் இப்பிறவியோடு முடிந்து விடும். எத்தனை பிறவி எடுத்தாலும் உயிர் ஒன்று தான். எனவே அதற்கு முதலிடம் கொடுப்பது என்பது புரிகிறதா? எனவே ஆன்மிகமும், உழைப்பும் மனிதனின் இருகண்கள். ஆன்மிகத்திற்கு முக்கியத்துவமும், உடலை வளர்க்க அத்தியாவசியமான உழைப்பும் மட்டும் போதும்.