உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரப் பெயர்கள்!

சிதம்பரப் பெயர்கள்!

திருவிசைப்பா பாடிய கரூவூர்த்தேவர், நடராஜர் ஸ்தலமான சிதம்பரத்தை கோயில் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். தில்லை மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் தில்லைக்காடு என்றும் பெயருண்டு. ஊருக்குக் கிழக்கிலுள்ள பிச்சாவரம் அருகே உப்பங்கழியின் கரையில் தில்லை மரங்கள் காணப்படுகின்றன.  இறைவனுக்கு திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார், மன்னுக தில்லை வளர்க! என்று போற்றுகிறார். வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர் தீராத ஆவலுடன் சிவனை இங்கு வழிபட்டதால் பெரும்பற்றப்புலியூர் என்றும் பெயருண்டு. ஞானகாசம் என்னும் பொருளில்
இதற்கு சிதம்பரம் என்ற பெயர் உண்டானது. பொன்னம்பலம், புலியூர், வியாக்ரபுரம், பூலோக கைலாசம், புண்டரீகபுரம் ஆகிய பெயர்களும் சிதம்பரத்திற்கு இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !