சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ரோற்சவம்
ADDED :32 minutes ago
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் 7ம் தேதி திருபவித்ரோற்சவம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு நித்ய ஹோமம், 8:00 மணிக்கு திருமஞ்சனம், 10:00 மணிக்கு பெருமாள் தாயார் சயனநரசிம்மர் மற்றும் பரிவாரமூர்த்தி சுவாமிக்கு பவித்ரம் சாற்றுதல்; பகல் 12:00 மணிக்கு பூர்ணாகுதி, வேதபிரபந்த சாற்றுமுறை நடந்தது. மாலை 5:30 மணிக்கு உற்சவர் உபயநாச்சியாருடன் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று காலை 7:00 மணிக்கு புண்யாவாசனம், அக்னி ஆராதனம், நித்ய ஹோமம், காலை 8:00 மணிக்கு அஷ்டோத்ர கலச திருமஞ்சனம், காலை, 11:30 மணிக்கு மகாபூர்ணாகுதி, கடம்புறப்பாடு, மாலை உற்சவர் உபயநாச்சியாருடன் உள்புறப்பாடு நடக்கிறது.