உழவர்குடி சர்வ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :22 hours ago
சாணார்பட்டி அருகே உழவர்குடி சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நேற்று முன்தினம் திருச்செந்தூர், ராமேஸ்வரம், திருமலைக்கேணி, அழகர் கோவில்மலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி மேளதாளம் முழங்க கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது.
நேற்று காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்ற, கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.இதனைத் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை உழவர்குடி கிராம மக்கள் செய்திருந்தனர்.