விநாயகர் சதுர்த்தி கோலாகலம்; கோவை கோவில்களில் குவிந்த பக்தர்கள்
கோவை; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஈச்சனாரி விநாயகர் மற்றும் புலியகுளம் முந்தி விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
ஆவணி மாதம் சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் நிகழ்வு விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது இந்த நாளில் விநாயக பெருமான் பிறந்ததாக ஐதீகம் விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை அலங்கரித்து பூஜை செய்வது என்பது வழக்கமான ஒன்றாகும் அவருக்கு பிடித்தமான இனிப்பு கொழுக்கட்டை பொங்கல் சுண்டல் பழங்கள் ஆகியவற்றை நெய்வேத்தியம் செய்து விநாயகருக்கு படைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரசாதம் கொடுப்பர்.அதேபோன்று பல்வேறு அமைப்புகள் அவர்களுடைய இடங்களில் பெரிய விநாயகர் சிலைகளை வைத்து மூன்றாம் நாள் ஐந்தாம் நாள் ஏழாம் நாள் ஆகிய நாட்களில் நீர் நிலைகளில் விநாயகர் சிலையை கரைப்பது வழக்கம் விநாயகர் முழுமுதற் கடவுளாக போற்றப்படுகிறார் எந்த காரியத்தை துவங்கும் முன்பும் விநாயகரை வழிபட்டு விட்டு மற்ற வேலைகளை செய்தால் பலன் கிட்டும் விநாயகரை வழிபடுவதால் கல்வி ஞானம் செல்வம் ஆகியன பக்தர்களுக்கு கிடைப்பதாக நம்பப்படுகிறது முழுமுதற் கடவுளான விநாயகர் சதுர்த்தி அன்று உலகெங்கும் விநாயகரை வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது இதையொட்டி கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் புளியகுளம்முந்தி முந்தி விநாயகர் கோவில் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 கம்பீர விநாயகர் கோவில் ராம் நகர் பிரசன்ன மகா கணபதி கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை ஹோமம் அபிஷேகம் ஆகியன நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இந்த நிகழ்வையொட்டி கோவை மற்றும் கோவை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.