உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா; அதிகாலையிலே தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள்

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா; அதிகாலையிலே தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள்

சிவகங்கை ; காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்காக கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அன்றிலிருந்து தினமும் காலையில் வெள்ளிக்கேடகத்தில் உற்வர் ஸ்ரீ கற்பகவிநாயகர்  திருவீதி உலா நடைபெற்றது மேலும் விழா நாட்களில்  இரவில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளியும் திருவீதி உலா வருகை தந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


விழாவின் 9 ஆம் நாள் திருவிழாவில் தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மூலவர் கற்பக விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த சந்தனக்காப்பு அலங்காரத்தை கான தமிழகம் முழுவதிலும் இருந்து திரளாக பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து தொடர்ந்து தங்கக் கவசத்தில் காட்சி அளிக்கும் மூலவர் கற்பக விநாயகரை பலரக்கணக்கான பக்தர்கள்நீண்ட வரிசை காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு மேல் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிள்ளையார்பட்டி கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மேலும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் பேருந்து போக்குவரத்து வாசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !