பல்லடம் பரமசிவன் கோவிலில் மழைக்காக கூட்டு வழிபாடு
ADDED :1 days ago
பல்லடம்: பல்லடம் அருகே பல்லவராயன்பாளையம் பரமசிவன் கோவிலில் 3-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மழை வளம் வேண்டி சிறப்பு கூட்டு வழிபாடு நடந்தது. திருவிளக்கு வழிபாடு, சிறப்பு வேள்வியுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பரமசிவன், பார்வதி அம்மனுக்கு அருள்நீர் சொரிதல் நடைபெற்றது. தொடர்ந்து, நந்தியம் பெருமானுக்கு தீர்த்தம் ஊற்றி பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் பரமசிவன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பவானி சிவனடியார் திருக்கூட்ட பேராசிரியர் பிரகாசம் வேள்வி வழிபாடுகளை நடத்தி வைத்தார். பக்தர்களுக்கு கோவில் கமிட்டி சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.