உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  விஸ்வேஸ்வரர் கோவிலில் ஸ்ரீசாய் பக்தர்கள் ஏகாதச ருத்ர பாராயணம்

 விஸ்வேஸ்வரர் கோவிலில் ஸ்ரீசாய் பக்தர்கள் ஏகாதச ருத்ர பாராயணம்

  திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர பாராயணம் நடைபெற்றது.


திருப்பூர் மாவட்ட ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு சார்பில் 108 கோவில்களில் சாய் பக்தர்கள் பங்கேற்கும் ஏகாதச ருத்ர பாராயணம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 100-வது நிகழ்ச்சி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்றது. காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெற்ற ருத்ர பாராயணத்தில் சாய் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலை 3:00 முதல் இரவு 8:00 மணி வரை சாய் மந்திர் வளாகத்தில் 100 பஜன்கள் சுவாமிக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான சாய் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அமைப்பின் மாவட்ட தலைவர் தலைமையில் சேவா அமைப்பினர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !