கஷ்டம் கடவுள் கொடுத்த வரம்: ஸ்ரீஅன்னை
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.
* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் பயணிக்கலாம்.
* பிறருடன் வீணாக சச்சரவில் ஈடுபடாதே.
* மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நல்ல வழியில் செல்.
* கஷ்டம் வந்தால் அதை ஏற்றுக்கொள். அது கடவுள் கொடுத்த வரம்தான்.
* கடவுளின் அருளை உணர்ந்து கொள்ள முயற்சி செய்.
* கடந்ததைப் பற்றி வருந்தாதே. வருவதை பற்றி கற்பனை செய்யாதே.
* உனக்கு தேவையான அனைத்தும் கடவுளிடம் உள்ளன.
* நல்லவர்களுடன் பழகு. அவர்களின் சொற்கள் ஆறுதல் தரும்.
* குறைவாகப் பேசு. அதுவே நல்லது.
* ஆபத்தான சமயத்தில்தான் அமைதி அவசியம்.
* உண்மையான தேவை நிச்சயம் உன்னைத் தேடி வரும்.
* அமைதியாக இருக்காதே. உண்மையை வெளிப்படுத்து.
* தவறான பாதையில் செல்பவர்களுடன் பழகாதே.
* எதிலும் ஆர்வமாக ஈடுபடு. முன்னேற்றம் வந்தே தீரும்.
* தைரியம் இல்லாதவர்களே பிறர் மீது பொறாமைப்படுவர்.
* தற்பெருமையாக பேசாதே. மீறி பேசினால் முன்னேற முடியாது.