உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி விழா; வடமாநிலங்கள் போல் புதுப்பாளையத்தில் துர்க்கை சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு

நவராத்திரி விழா; வடமாநிலங்கள் போல் புதுப்பாளையத்தில் துர்க்கை சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு

தொண்டாமுத்தூர்; புதுப்பாளையத்தில், நவராத்திரி விழாவையொட்டி, துர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


வடமாநிலங்களில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில், நவராத்திரி விழாவில், வீடு மற்றும் கோயில்களில் கொலு வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொண்டாமுத்தூர் அடுத்த புதுப்பாளையத்தில், ஆண்டுதோறும், துர்க்கை சிலை வைத்து நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று காலை, விநாயகர் கோயில் மைதானத்தில், தூர்க்கை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இரண்டாம் நாளான இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும், சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பத்தாம் நாளான விஜயதசமி அன்று, நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !