அம்பலகாரன்பட்டியில் வல்லடிகாரர் கோயில் தேரோட்டம்
ADDED :4668 days ago
மேலூர்: மேலூர் அருகே அம்பலகாரன்பட்டியில் வல்லடிகாரர் கோயில் பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது.சிவராத்திரி முதல் 15 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் உச்சி பொங்கல், கிடா வெட்டு நிகழ்ச்சிகளுடன் இரவு ரத உற்சவம் நடந்தது.நேற்று காலை விநாயகர் ஊர்வலம் முன் செல்ல, வல்லடிகாரர், பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் கோயிலின் நான்கு வீதிகளிலும் தேரோட்டம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று(மார்ச் 31) மஞ்ச நீராட்டு விழா நடக்கிறது.