ஆஞ்சநேயர் கோயிலில் பிரதிஷ்டை விழா
ADDED :4573 days ago
உடன்குடி: உடன்குடி அருகே தண்டுபத்து கண்டுகொண்ட ஆஞ்சநேயர் கோயில் 4வது ஆண்டு பிரதிஷ்டை விழா நடந்தது. தண்டுபத்து கண்டுகொண்ட ஆஞ்சநேயர் கோயில் 4 வது ஆண்டு பிரதிஷ்டை விழாவையொட்டி மாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசா தம் வழங்கினர். ஏற்பாடுகளை சுயம்புநாதன், குகன், மகேஷ் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.