பாவம் போக்கும் தூரகநாமம்!
ADDED :4931 days ago
இறக்க முக்தி தரும் தலம் காசி. காசியில் இறக்கும் உயிர்களை அகிலாண்ட நாயகியான அன்னபூரணி தன் மடியில் கிடத்தி முந்தானையால் வீசுவதாக ஐதீகம். அப்போது சிவபெருமான் அந்த ஜீவனின் காதில் தாரகமந்திரமான ராமநாமத்தை ஜெபித்து நற்கதி அளிக்கிறார். கொடிய பாதகச் செயலைச் செய்த பாவியாக இருந்தாலும், உண்மையாகவே மனம் வருந்தி இனி செய்யமாட்டேன் என்று உறுதி கொண்டு நாள் தோறும் 1008 முறை ராமநாமத்தை ஓராண்டு ஜெபித்து வந்தால் பாவ விமோசனம் கிடைக்கும், என்று அருளாளரான சமர்த்த ராமதாசர் நமக்கு வழிகாட்டியுள்ளார்.