பங்குனிப் பொங்கல்!
ADDED :4910 days ago
மாரி, காளி போன்ற பெண் தெய்வங்களுக்கு பங்குனியில் பொங்கல் சிறப்பாக நடக்கும். செவ்வாய் சாற்றுதல் என்று இதற்குப் பெயர். வெம்மையைத் தணிக்கும் விதத்தில் அம்மனுக்கு கூழ் காய்ச்சி படைப்பர். அம்மன் மனம் குளிர்ந்தால் கோடை மழை நன்கு பெய்யும் என்பது நம்பிக்கை. அம்மை, கொப்பளம் போன்ற உஷ்ண வியாதிகள் நீங்கவும் கூழ் படைப்பதுண்டு. அம்மனை வேண்டி கோடையில் நீர்மோர்,பானகம், தண்ணீர் தானம் செய்தால், குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைக்கும்.