மேஷம்:உடல்நலனில் கவனம்!
செவ்வாயை ஆட்சிநாயகனாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே!
சூரியன் சிம்மத்தில் பிரவேசிக்கும் இந்த காலம், பகைவர் தொல்லை அதிகரிக்கும். வியாதி ஏற்படலாம் என்பது ஜோதிட விதி. அதேநேரம், சூரியனின் 7-ம் பார்வை 11-ம் இடமான கும்பத்தில் விழுவதால் எடுத்த செயல் சிறப்பாக நிறைவேறும். நல்ல பொருளாதார வளம் அமைந்திருக்கும். செவ்வாயால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்னை வரும். பயணத்தின் போது கவனம் தேவை. ஆனால், செவ்வாயின் பார்வை சிறப்பாக அமையும். அதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான சுக்கிரன் 6-ம் இடத்தில் இருப்பதால் முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம். ஆனால், செப்.8க்குப் பிறகு அவர் 7-ம் இடத்துக்கு செல்வதால் பெண்களால் தொல்லை வரலாம். ஆனால், அவரது பார்வையால் நன்மை கிடைக்கும்.புதன் 5ம் வீட்டில் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் தொழில் ரீதியாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகலாம். ஆனால், செப்.3ல் இடம் மாறி கன்னிக்கு செல்கிறார். இதனால், முயற்சியில் வெற்றி உண்டாகும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு செப்.3 க்குபிறகு புதன் சாதகமாக இருப்பதால், போட்டிகளில் வெற்றி காண்பர். கலைஞர்கள் நற்பெயர் பெற்று மகிழ்வர். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி தேவைப்படும். செப்.8 க்குப் பிறகு சீரான நிலை காண்பர்.பெண்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் மாத இறுதியில் விலகும். அதுவரை பொறுமையுடன் இருப்பது அவசியம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 19, 20, 21, 22, 26, 30, 31,செப்.1,7,8, 9,10, 15,16
கவன நாட்கள்: செப். 11,12 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்கள்: 3,7 நிறம்: வெள்ளை,பச்சை
வழிபாடு: வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். செவ்வாயில் முருகன், துர்க்கையை வழிபடுங்கள். காலையில் சூரியனை வணங்குங்கள்.