உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷபம்: வருமானம் உயரும்!

ரிஷபம்: வருமானம் உயரும்!

சுக்கிரனை ஆட்சிநாயகனாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே!

ரிஷப ராசிக்கு 4-ம் இடமான சிம்மத்தில் சூரியன் ஆட்சி பெற்று இருக்கும் காலம் இந்த ஆவணி மாதம். அவரால் பெண்கள் வழியில் விரோதம் ஏற்படலாம். அவரின் பார்வை கும்பத்தில் இருப்பதால் எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நல்ல பொருளாதார வளம் இருக்கும். தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்.செவ்வாயால் பக்தி எண்ணம் மேம்படும். எடுத்த புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வருமான உயர்வால் பொருளாதாரம் மேம்படும். அதோடு செவ்வாயின் பார்வை துலாமில் விழுவது சிறப்பு. அதன் மூலம் திடீர் பணவரவைக் காண்பீர்கள். உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன் 5-ம் இடமான கன்னியில் இருப்பது மிகச்சிறப்பு. அவரால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். செப்.8க்குப் பிறகு, சுக்கிரன் 6-ம் இடத்துக்குச் செல்வது சிறப்பானது அல்ல என்றாலும், அவர் உங்கள் ஆட்சி நாயகன் என்பதால் கெடுபலன் தரமாட்டார். புதனால் மாத தொடக்கத்தில் நன்மையும், பொருள் வளமும் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செப்.3க்குப் பிறகு கன்னிக்கு செல்வதால் நன்மை தர இயலாது. குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.வருட கிரகங்களான குரு, சனி, ராகு ஆகியோரால் நன்மையே உண்டாகும்.  தொழில் வளர்ச்சி அடையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். மாணவர்களுக்கு இந்த மாதத்தை பொறுத்தவரை முன்னேற்றமான நிலை நீடிக்கிறது. கலைஞர்கள் மாத முற்பகுதியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் நன்மதிப்பு உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். கேதுவால் பித்தம், மயக்க உபாதைகள் வரலாம்.

நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 21, 22, 23, 24,25,28,29,செப்.2, 3,9,10,11,12
கவன நாட்கள்: ஆகஸ்ட்17,18,செப்.13,14
அதிர்ஷ்ட எண்கள்: 3,9    நிறம்: மஞ்சள், சிவப்பு, பச்சை
வழிபாடு: கேது பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். காலையில் சூரியனை வணங்குங்கள். சூரிய உதயத்துக்கு முன் எழுவது நல்லது. சூரியன் மறையும் போது தூங்கவோ, சாப்பிடவோ கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !