உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களிமண் சிலைக்கு பதில் கற்­சிலை: சென்­னையில் வித்­தி­யா­ச­மான விநா­யகர் சதுர்த்தி!

களிமண் சிலைக்கு பதில் கற்­சிலை: சென்­னையில் வித்­தி­யா­ச­மான விநா­யகர் சதுர்த்தி!

சென்னை: கடந்த 21 ஆண்­டு­க­ளாக பெரம்பூர் ஜெயா தோட்ட குடி­யி­ருப்­பு­வா­சிகள் வித்­தி­யா­ச­மான முறையில் விநா­யகர் சதுர்த்தி விழாவை கொண்­டாடி வரு­கின்­றனர். பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்­ளது ஜெயா தோட்டம். அங்கு 30க்கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­புகள் உள்­ளன. அங்கு நடக்கும் விநா­யகர் சதுர்த்தி விழா கொண்­டாட்டம் குறித்து, பெரம்பூர் ஜெயா தோட்ட நண்­பர்கள் குழு­வினர் கூறி­ய­தா­வது: விநா­யகர் சதுர்த்தி விழாவில், விநா­யகர் சிலை பிர­திஷ்டை செய்து பின் அதை கடலில் கரைப்­பதால், மூன்று நாட்கள் கொண்­டா­டப்­பட்ட சிலை கடலில் கரை­வதும், அதனால் கடல் மாச­டை­வதும், எங்­களை பெரிதும் பாதித்­தது. அதனால் விநா­யகர் சதுர்த்­தியின் போது வைக்­கப்­படும் சிலை, நம்மால் சிதைக்­கப்­ப­டாமல், பிற­ருக்கு உதவும் வகையில் அமைய வேண்டும் என்று எண்­ணினோம். அதன் பய­னாக கடந்த 20 ஆண்­டு­க­ளுக்கு முன், இரண்டு முதல் இரண்­டரை அடி உய­ரத்தில் பல வடி­வங்­களில் ஆன விநா­யகர் கற்­சி­லை­யுடன், பலி­பீடம், மூஞ்­சூறு உள்­ளிட்­ட­வை­களை வாங்­கினோம். சிலையை வீட்டில் வைத்து முறை­யாக பூஜித்து, பின் குடி­யி­ருப்­புக்கு மத்­தியில், விநா­யகர் சதுர்த்தி அன்று பிர­திஷ்டை செய்வோம். விநா­யகர் சதுர்த்தி முடிந்து, மூன்று நாட்கள் கழித்து, விநா­யகர் சிலையை பலி­பீடம் மற்றும் மூஞ்­சூறு வாக­னத்­துடன் தமி­ழ­கத்தில் உள்ள ஏதா­வது ஒரு கோவி­லுக்கு தான­மாக கொடுத்து விடுவோம். இவ்­வாறு கடந்த 21 ஆண்­டு­க­ளாக, நாங்கள் வழி­பட்ட சிலையை கொடுத்து வரு­கிறோம். இவ்­வாறு அவர்கள் கூறினர். இந்­தாண்டு வைக்­கப்­படும் கற்­பக விநா­யகர் சிலையை, திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தி­லுள்ள வேதாந்­தீஸ்­வரர் கோவி­லுக்கு கொடுப்­ப­தாக திட்­ட­மிட்­டு உள்­ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !