மசினியம்மன் கோவில் விழா
ADDED :4374 days ago
கூடலூர்: மசினகுடி மசினியம்மன் கோவில் தசரா திரு விழா கடந்த 4ம் தேதி துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு மாயாரிலிருந்து சிக்கம்மன் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 4ம் தேதி முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கடந்த 12ம் தேதி இரவு 9:30 மணிக்கு திருதேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம், மசினகுடி நகர் மற்றும் முக்கிய ஊர் வழியாக சென்று, அதிகாலை 6:30 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்த சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. தொட ர்ந்து, சிக்கம்மன் ஊர்வலமாக மாயார் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது.