உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தியின் உச்சம்!

பக்தியின் உச்சம்!

ஸ்ரீராமானுஜர் திருத்தல யாத்திரை சென்று கொண்டிருந்தார். ஆழ்வார் திருநகரி அருகே வந்தபோது அவரை ஒரு சலவைத் தொழிலாளி வந்து வணங்கினார். தன் குழந்தைகளையும் காரிமாறா, சடகோபர், வகுளாபரணா, குருகூர் நம்பி, நம்மாழ்வார், பராங்குசா என்று ஒவ்வொருவராக பெயர் சொல்லி அழைத்து, ராமானுஜர் காலில் விழுந்து வணங்கச் சொன்னார். அதைக் கண்ட ராமானுஜர், சலவைத் தொழிலாளி இப்படிப் பல குழந்தைகளை பெற்று, அத்தனை பேருக்கும் ஆழ்வார்களின் திருநாமங்களை சூட்டி, நாள் ஓயாமல் உச்சரிக்கக் கொடுத்து வைத்திருக்கிறானே! இந்த பாக்கியம் எனக்குக் கிட்டாமல் போய்விட்டதே! என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !