விஜய கீர்த்தி அம்மன்
ADDED :4770 days ago
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள ஆவுடையார் கோயிலில் நந்தி, கொடி மரம் கிடையாது. கருவறையில் லிங்கத்திற்குப் பதில் ஒரு குழி மட்டுமே உள்ளது. இறைவன் ஆதியும், அந்தமும் இல்லாதவன் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக இப்படி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுவார்கள். ஆற்காட்டிலிருந்து ஆரணி வரும் வழியில் உள்ள விளாப்பாக்கம் எனும் ஊரில் விஜய கீர்த்தி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் அம்மனை அஞ்ஞாத வாசத்தின்போது அர்ஜுனன் வழிபட்டானாம். அதன்பின்னர்தான் பல வெற்றிகள் அவனுக்குக் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.