என்ன அழகு! எத்தனை அழகு!
ADDED :4769 days ago
புகழ்பெற்ற வைணவத்தலங்களுள் சில தலங்களில் சில விஷயங்களை அழகாகச் சொல்வார்கள். எங்கே, என்ன அழகு? அரங்கனுக்கு நடையழகு-ஸ்ரீ ரங்கநாதரின் நடையழகு சேவை. வரதனுக்கு குடையழகு- காஞ்சி வரதராஜரின் திருக்குடை. அழகருக்குப் படையழகு- கள்ளழகருடன் மதுரைக்கு வரும் படை. மன்னாருக்கு தொடையழகு- ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கமன்னாருக்கு ஆண்டாள் சூடித்தரும் மாலை(தொடை- மாலை) அழகு. அமுதனுக்கு கிடையழகு- குடந்தை ஆராவமுதனின் கிடை அதாவது பள்ளிகொண்ட திருக்கோலம் அழகு.
நாரணர்க்கு முடியழகு- திருநாராயணபுரத்து செல்லப் பிள்ளையின் வைரமுடி சேவை அழகு.
திருமலையான் வடிவழகு- திருப்பதி வேங்கடவனின் தோற்றம் அதியற்புத அழகு. சாரதிக்கு உடையழகு- திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாளின் ரதசாரதி உடையலங்காரம் அழகு.