உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோயில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

அருணாசலேஸ்வரர் கோயில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜருக்கு  புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி நாளான வியாழக்கிழமை நடராஜருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. காலை முதல் பகல் 12 மணி வரை பால், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், கதம்பம் உள்ளிட்ட பூஜை பொருள்களால் அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேக -ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற மகா தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 7 மணி முதல் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !