உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் பராமரிக்கப்பட்ட 36 மாடுகள் மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு

கோவிலில் பராமரிக்கப்பட்ட 36 மாடுகள் மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்தி கடனாக பசு மாடுகள், காளை மாடுகள் மற்றும் கன்று குட்டிகளை வழங்கி வருகின்றனர். தானமாக மாடுகளை வழங்கும் போது அதன் பராமரிப்பிற்காக ரூ.5 ஆயிரம் செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் தானமாக வழங்கிய 77 பசுமாடுகள், 40 கன்றுகுட்டிகள், 3 காளை மாடுகள் அருணாசலேஸ்வரர் கோவிலில் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில் கோசாலையில் பராமரிக்கப்படும் மாடுகளுக்கு 10 நாட்களாக உணவு வழங்கவில்லை என்றும், சரியான பராமரிப்பு இல்லை என்றும் இந்துமுன்னணி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த மாடுகளில் 36 மாடுகளை கலசபாக்கம் அருகே உள்ள கோவில் மாதிமங்கலத்தில் செயல்பட்டு வரும் 6 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்க கலெக்டர் ஞானசேகரன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !