முயற்சி திருவினையாக்கும், எல்லாம் இறைவன் செயல் -இதில் எதை பின்பற்றுவது?
ADDED :4763 days ago
முயற்சி இல்லாமல் எந்தச் செயலும் நிறைவேறுவதில்லை. அதனால், முயற்சி திருவினையாக்கும் என்பது சரியானது. ஆனால், முயற்சி முடிந்த நிலையில் பலன் கிடைக்க வேண்டும் அல்லவா? அந்த பலனை நமக்கு தருபவர் இறைவன். முயற்சியால் பலன் கிடைத் தாலும், கிடைக்காவிட்டாலும் அது இறைவன் செயல் என்று ஏற்றுக் கொள்வதே பக்குவம்.