உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுடேஸ்வரி கோவிலில் எட்டாம் ஆண்டு விழா!

சவுடேஸ்வரி கோவிலில் எட்டாம் ஆண்டு விழா!

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன், கும்பாபிஷேகம் நடந்தது. அதையடுத்து, நேற்று, எட்டாம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. அதிகாலையில், அம்மனுக்கு கணபதி ஹோமம், புனித நீர் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பெண்கள் குத்துவிளக்கு பூஜை நடத்தினர். வெண்ணெய் காப்பு அலங்காரத்தில், அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !