பேரை சொன்னாலே காய்ச்சல் போயிடும்!
ADDED :4364 days ago
காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின், உடம்பெல்லாம் உஷ்ணமாகி, பேச்சு மூச்சற்றுப் போனாள். வீட்டிலிருந்த மூத்த பெண்கள், அவளுக்கு முடிந்த வரையில் சிகிச்சை செய்தும் பலனேதும் கிடைக்கவில்லை. அவளுடைய உயிர்த்தோழிக்கு மட்டும் உஷ்ணத்தின் ரகசியம் தெரிந்தது. அவள் அவர்களிடம், ஏன் வருந்துகிறீர்கள்? அவளுக்கு சிதம்பரத்தில் இருக்கும் அம்பலவாணர் மீது அன்பு. அவளது காதில் மெல்ல நடராஜரின் திருநாமத்தைச் சொல்லுங்கள், விழித்து விடுவாள், என்றாள். அவர்களும் அவ்வாறே சொல்ல, அந்த பெண் காய்ச்சல் தீர்ந்து இயல்பு நிலை பெற்றாள். இந்த கருத்து அமைந்த பாடல்கள் நம்பியாண்டார் நம்பியின் கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.