உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழு ஆண்டுக்கு பின் ஊர் கூடி திருவிழா!

ஏழு ஆண்டுக்கு பின் ஊர் கூடி திருவிழா!

காரியாபட்டி: காரியாபட்டி சத்திரம்புளியங்குளத்தில் அழகுநாச்சியம்மன், திருவேட்டை அய்யனார் கோயில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வந்தது. உள்ளாட்சி தேர்தல் பிரச்னை காரணமாக, சுவாமி கும்பிடுவதில் பிரச்னை ஏற்பட்டு, ஏழு ஆண்டுகளாக, திருவிழா நடக்கவில்லை. இந்நிலையில் ஊர் மக்கள் ஒன்று கூடி, நான்கு நாட்கள் திருவிழா நடத்த ஏற்பாடு செய்தனர். டிச.,10ல் அக்னி சட்டி , அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தனர். டிச.,11ல் பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் நடந்தது. டிச.,11 மற்றும் நேற்று, சாமி ஆட்டம் நடந்தது. கலை நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி, நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !