உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் நல்லாயன் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகே உள்ள நல்லாயன் தேவாலயத்தில் நேற்று காலை 9 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடந்தது. பங்குதந்தை ஆரோக்கியராஜ் ஆராதனை மற்றும் திருப்பலி பூஜைகளை நடத்தினார். தே.மு.தி.க., மாவட்ட துணை செயலாளர் உமாசங்கர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்குதந்தை கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டினார். ஒன்றிய செயலாளர் காமராஜ், நகர செயலாளர் பாலாஜி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, முன்னாள் நகர செயலாளர் பாலு, மாவட்ட தொண்டரணி செயலாளர் அஷ்ரப், வழக்கறிஞர் பழனிபாலாஜி, நகர அவைத்தலைவர் ராஜேந்திரன், பொருளா ளர் அண்ணாமலை பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !