அய்யப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம்
ADDED :4326 days ago
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் அய்யப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் நடந்தது. சங்கராபுரம் தர்ம சாஸ்தா அன்னதான சேவா சமிதி சார்பில் வாசவி மண்டபத்தில் குத்து விளக்கு பூஜை, நெய் அபிஷேக நிகழ்ச்சி நடந்தது. சபரிமலை மேல்சாந்தி பிரம்மஸ்ரீ ஸ்ரீகுமார் சர்மா தலைமையில் கணபதி ஹேறாமம் நடந்தது. கெங்கையம்மன் கோவில் வளாகத்தில் அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு விழாவும், கலச பூஜையும் நடந்தது. பின்னர் கோ பூஜையும், அய்யப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம், பாலபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், விபூதி அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பகல் 12 மணிக்கு சுமங்கலிகள் குத்துவிளக்கு பூஜையும், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பேருராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சேவா சமிதி மத்திய சங்க பொருளாளர் அன்பழகன் மற்றும் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.