செஞ்சி பகுதி தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா
செஞ்சி: செஞ்சி பகுதியில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. செஞ்சி புனித மிக்கேல் தேவாலயத்தில் அருட்தந்தை டேவிட் ஜான் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. பங்கு தந்தை பிச்சை முத்து அடிகளார், பள்ளி முதல்வர் தந்தை எட்வர்ட் ஆனந்த், பங்கு பேரவை தலைவர் செல்வராஜ், ஜார்ஜ்குட்டி மற்றும் பங்கு குழு பேரவையினர் கலந்து கொண்டனர். செஞ்சி விழுப்புரம் ரோடு சி.எஸ்.ஐ., கன்மலை தேவாலயத்தில் சபை ஆயர் ஆப்ரகாம் ஆசைத்தம்பி தலைமையில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. செயலாளர் முத்து ராஜசேகரன், பொருளாளர் ராஜன் சுந்தர்சிங் மற்றும் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். அணிலாடி தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் பங்கு தந்தை அந்தோணிசாமி தலைமையில் வழிபாடு நடந்தது. பள்ளி முதல்வர் தந்தை ஆனந்தராஜ், ஊராட்சி தலைவர் லாரன்ஸ் மற்றும் கீழ்வை லாமூர், கல்லடிகுப்பம் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த கிறித்துவர்கள் பங்கேற்றனர். நாகந்தூர் தென்னிந்திய திருச்சபை சர்ச்சில் இரவு முழுவதும் கிறிஸ்மதுஸ் கலை நி கழ்ச்சிகள் நடந்தன. அதிகாலை நடந்த பிரர்த்தனையில் பங்குத் தந்தை பக்தகுமார், உபதேசகர் குட்டிபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். கணக்கன்குப்பம், அணிலாடி, சத்தியமங்கலம், துரிஞ்சிப்பூண்டி, வேலந்தாங்கல், கொம்மேடு, ஆலம்பூண்டி, அணையேரி, மேல்சித்தாமூர் தேவாலயங்களிலும் நடந்த சிறப்பு பிராத்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.