உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீ.சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

வீ.சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

ஈரோடு: வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வழிப்பட்டனர். ஈரோடு, வீரப்பன்சத்திரம், மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த வாரம் செவ்வாய் கிழமை பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தீர்த்தம், கரகம், அலகு குத்தும் நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில், நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. சத்திரம், சேமூர், கருங்கல்பாளையம், அசோகபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் குடும்பத்துடன் வந்து, பொங்கல் வைத்தும், மா விளக்கு எடுத்தும், ஊர்வலமாக வந்து, மாரியம்மனை தரிசித்தனர். விழாவை ஒட்டி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்திருந்தனர். பக்தர்களுக்கு கூழ், உணவுகளை வழங்கி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !