உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையான கற்கோவில் ரூ.50 லட்சத்தில் சீரமைப்பு

பழமையான கற்கோவில் ரூ.50 லட்சத்தில் சீரமைப்பு

காரைக்குடி: காரைக்குடி செஞ்சையில், 500 ஆண்டு பழமையான ஈஸ்வரன் கோவில்,ரூ.50 லட்சத்தில் புனரமைக்கப்பட உள்ளது. காரைக்குடி செஞ்சை கண்மாய் ஓரத்தில், 500 ஆண்டு பழமையான ஈஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு நந்தி, பிள்ளையார், அம்பாள், சிவன் சிலைகள் இரட்டையாக உள்ளன. இங்குள்ள நந்தியின் கொம்பில், தட்டினால் வெண்கல ஓசை உருவாகும். கோவிலின் கீழ் பூமியில், வைரவர் உள்ளதாக ஐதீகம். நான்கு திசைகளிலும், நான்கு கருப்பர் கோவில் உள்ளது. ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ், நிதி உதவி பெற்று, ஒரு வேளை பூஜை நடந்து வந்தது. இக்கோவில் உபயதாரர்களில் ஒருவரான சிதம்பரம் கூறும்போது: இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், செம்பரான் கல்லால் கட்டப்பட்டது.கேரளீஸ்வரர் கோவில், கருங்கல்லால் கட்டப்பட்டது. இது ரூ.50 லட்சம் செலவில் சீரமைக்கப்பட உள்ளது. இந்த பணி உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !