ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பகல்பத்து ஏழாம் நாள் விழா!
ADDED :4333 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து ஏழாம் நாளான நேற்று, உற்சவர் நம்பெருமாள் ஆண்டாள் முத்துக்கொண்டை அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார். மார்கழி மாதம் பாவை நோன்பையொட்டி, 23ம் பாசுரத்தின்படி, கோவில் கண்ணாடி அறையில் வீற்றிருக்கும் ஆண்டாளுக்கு, சீரிய சிங்காசனத்தில் சிங்கம் அலங்காரம் சித்தரிக்கப்பட்டது.