திருமேற்றளீஸ்வரர் கோயிலில் பூஜை!
ADDED :4272 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திருமேற்றளீஸ்வரர் கோயிலின் திருக்குள புனரமைப்புப் பணிக்கான பூமி பூஜை தொடங்கியது. தற்போது இவ்வாலய திருக்குளம் புதர்கள் மண்டி காணப்படுவதால் புதர்களை அகற்றி குளத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து திருக்குள புனரமைப்புப் பணிக்கான பூமிபூஜை ஆலய வளாகத்தில் நேற்று நடைபெற்றது.