உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம்!

விருத்தாசலம் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம்!

விருத்தாசலம்: விருத்தாசலம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் மகாசிவராத்திரி உற்சவ மயானக்கொள்ளை நேற்று நடந்தது. விருத்தாசலம், சந்தைப்பேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி ரணகளிப்பு உற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றம், அன்று இரவு சுயரூபத்துடன் அம்மன் வீதியுலாவுடன் துவங்கியது. 24ம் தேதி அம்மன் நடராஜர்காட்சியில் பூவாலை கப்பரையுடனும், 25ம் தேதி கெஜலட்சுமி முகவோட்டுகப்பரை காட்சியில் வீதியுலாவும் நடந்தன. 26ம் தேதி அம்மன் பள்ளி கொண்ட காட்சி பஞ்சமுகத்துடனும், 27ம் தேதி குறத்தி வேடத்தில் குறி சொல்லும் காட்சியுடன் வீதியுலாவும், இரவு 7 மணியளவில் அம்மன் சுயரூபத்துடன் கோட்டை சென்று நிசாசனி வயிற்றை கிழித்து குடலை பிடுங்கி மாலையாக அணிதல், குழந்தையை முறத்தில் ஏந்திவரும் ஐதீகம், மகிடாசூரன் காட்சி ஆகியன நடந்தன. நேற்று காலை ஈஸ்வர முகத்துடன் மணிமுத்தாற்றில் சுடலை சென்று விருந்துகொல்லுதல் நடந்தது. பின்னர், மாலை 5 மணியளவில் மயானக்கொள்ளையும், வீதியுலாவும் நடந்தது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !