உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தானந்தா கோவிலில் சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா

சித்தானந்தா கோவிலில் சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா

புதுச்சேரி: மகா சிவராத்திரி விழாவையொட்டி, ரமணா பைன் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில், கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் 8ம் ஆண்டு, மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா நேற்று முன்தினம் நடந்தது. ரமணா பைன் ஆர்ட்ஸ் இயக்குநர் சூசைராஜ் வரவேற்றார். வீரரத்தினம், வீரகுமாரி முன்னிலை வகித்தனர். முதல்வர் ரங்கசாமி, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து, நாட்டிய நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிவரை நடந்த நாட்டியாஞ்சலி விழாவில், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த 300க்கும் அதிகமான பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று, நடனம் மற்றும் பாடல்கள் பாடினர். நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில், பரதநாட்டியம், ஒடிசி, குச்சிபுடி, மோகினியாட்டம் உள்ளிட்டவை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !