உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா!

திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா!

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் நாட்டியாஞ்சலி விழா, நேற்று முன்தினம் இரவு துவங்கியது.விழாவை, கலெக்டர் முத்தம்மா துவக்கி வைத்தார். கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐந்து நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் மும்பை பத்மினி ராதாகிருஷ்ணன் குழுவினர், கோயம்புத்தூர் லாவண்யா சங்கர், சென்னை சித்ரா விஸ்வேஸ்வரன், பெங்களூரு தீபா சுசீந்திரன் உள்ளிட்ட குழுவினரின் பரத நாட்டியம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !