உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவாரம் 7ம் திருமுறை நூல் வெளியீடு!

தேவாரம் 7ம் திருமுறை நூல் வெளியீடு!

புதுச்சேரி: தேவாரம் 7ம் திருமுறை நூல், சக்திவேல் பரமானந்தர் திருக்கோவிலில் வெளியிடப்பட்டது. உழந்தைகீரப்பாளையம், புவன்கரே வீதியில் சக்திவேல் பரமானந்தர் திருக் கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.இதன் தொடர்ச்சியாக கூட்டு வழிபாடு, ஆன்மிக பேருரை, திருமுறை நூல் வெளியீட்டு விழா நடந்தது.ஏ.எப்.டி., மில் சூப்பர்வைசர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஏ.எப்.டி.மில் சூப்பர்வைசர் புவனேஸ் வரன் வரவேற்றார்தேவாரம் 7ம் திருமுறை என்ற நூலை, திருவாவடுதுறை ஆதீன நேர்முக பயிற்சி மைய அமைப்பாளர் சந்திரசேகரன் வெளியிட, கோதண்ட பாணி பெற்றுக்கொண்டார்.தனமணி, நூல் அறிமுகவுரை யாற்றினார். ஜெயமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !