யானை மீது முருகன்!
ADDED :4629 days ago
மாகறல் என்ற திருத்தலம் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் வழியில் உள்ளது. திருமாகறலீஸ்வரர் என்பது இறைவன் திருநாமம். இறைவி திரிபுவன நாயகி. கஜபிருஷ்ட அமையில் கோயில் விமானம் அமைந்துள்ளது. நடராஜர் சன்னதிக்கு எதிர்புறத்தில் யானை மீது முருகன் அமர்ந்திருக்கும் அபூர்வத் திருமேனி உள்ளது. திண்டுக்கல் அருகிலுள்ள ஊர் சின்னாளப்பட்டி: பட்டுப் புடவைகளுக்கு மட்டும் இந்த ஊர் பெருமை பெற்றது அல்ல; இங்குள்ள முருகன் கோயிலுக்கும்தான்! இங்கு முருகன் நான்கு முகங்களுடன் தரிசனம் தருவது சிறப்பு. முருகன் சிவனுக்கு பிரணவ உபதேசம் செய்த திருத்தலம் சுவாமிமலை எனும் திருவேரகம். ஆனால் இங்கு பிரணவ உபதேச மூர்த்தி சுதை வடிவில் மட்டுமே உண்டு. விக்கரமாக இல்லை. ஆனால், திருப்போரூரில் பிரணவ உபதேச மூர்த்தி ஐம்பொன் திருமேனியாகவே உள்ளது.