விரைவில் விவாகம்!
ADDED :4629 days ago
திருச்சி பீமாநகரில் அமைந்துள்ளது பாலதண்டாயுதபாணி கோயில். மாதந்தோறும் வளர்பிறை சஷ்டி அன்று இங்கு முருகனுக்கு சத்ரு சம்ஹார மகாஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இங்கு செவ்வாய்க் கிழமைகளில் ராகு கால நேரத்தில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளும் கன்னியருக்கு செவ்வாய் தோஷம் நீங்கி, விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை.