உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சஷ்டியில் பழுக்கும் பழம்!

சஷ்டியில் பழுக்கும் பழம்!

சோலை மலையின் தலவிருட்சம் நாவல்மரம். தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் சிறுவனாக இந்த மரத்தில் அமர்ந்திருந்து, சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா? என்று அவ்வையாரைக் கேட்டு அருள் விளையாடல் நடத்திய மரம் இதுதான். பழத்தில் சுட்ட பழமாவது...சுடாத பழமாவது என எண்ணிய அவ்வையார், தம்பி, சுடாத பழமே கொடு! என்றார். சிறுவன் மரத்தை உலுக்கினான். பழங்கள் மணலில் விழுந்தன. உதிர்ந்து கீழே விழுந்த பழங்களை எடுத்து மண் போக ஊதினாள், அவ்வையார். சிறுவன், பாட்டி! பழம் மிகவும் சுடுகிறதா? என்று வினவினான். திடுக்கிட்ட அவ்வை, நீ யார் தம்பி? என்றாள்.  அப்போது சிறுவன், முருகப்பெருமானாக அருட்காட்சி தந்த நாவல் மரம் இதுதான். பொதுவாக நாவல் மரங்கள் ஆனி, ஆவணி மாதங்களில் பழுத்து முடிந்து விடும். இம்மரம் மட்டும் கந்தசஷ்டியில் பழுக்கும் என்பது சிறப்பம்சமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !