பெண்ணாக முருகன்!
ADDED :4629 days ago
முருகனைப் பெண்ணாக அலங்கரித்து அபிஷேக ஆராதனை நடத்தும் கோயிலைப் பார்த்திருக்கிறீர்களா? கோவை மாவட்டத்திலுள்ள சிரவணபுரம் சீரவை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்குப் பட்டுப்புடவை கட்டி, அழகாக அலங்கரித்து பூஜை வழிபாடு நடத்துவார் அர்ச்சகர். அன்று முருகனை தரிசிக்க பெண் பக்தர்கள் அதிகமாக வருவார்கள்.