உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாட்டையுடன் சாஸ்தா!

சாட்டையுடன் சாஸ்தா!

சிதம்பரத்திலிருந்து 20கி.மீ. தூரத்திலும் சேத்தியா தோப்புக்கு அருகிலும் உள்ள இடம்தான் சாத்தமங்கலம். மிகப் பழமையான சாஸ்தா கோயில் இங்கு இருந்ததால் சாஸ்தாமங்கலம் என்று அழைக்கப்பட்டு, பிறகு அதுவே சாத்தமங்கலம் ஆயிற்று. இத்தலத்தில் மூலவர் சாஸ்தா பூரண புஷ்கலையுடன் ஒரே கல்லில் வடிவமைக்கபட்டிருக்கிறார். மேலும் இந்தக் கல்லை தட்டினால் ஒலி எழும்பும் என்பது வியப்பான விஷயம். இங்கு சாஸ்தாவுக்கு யானை வாகனம் என்றாலும், வெளியே அவருக்கு எதிராக தனி மண்டபத்தில் சுதையால் ஆன மிகப் பெரிய நந்தி அமைந்திருக்கிறது. இத்தலத்தில் சாஸ்தா கையில் சாட்டையுடன் காட்சி தருகிறார். எதிரி பயம், திருமணத் தடை நீக்கி அருள்பவராக இவர் விளங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !